Thursday, July 24, 2014

ஹரிபாலா விமர்சனம்

Ever since I saw the movie Nan Kadavul I wanted to read Jeyamohan’s novel Ezham Ulagam.  Nan Kadavul is a movie that had left a lasting impression in me, it changed my perspective towards movies, that is when I realized that not all movies need to be entertaining, there is a lot more to it.  Having read the novel, I am finding it extremely difficult to express how I feel, it would be a gross understatement if I plainly say ‘I enjoyed reading the book’, and hence the blog.
  
Ezhan Ulagam is a novel that documents the day to day lives of beggars and racketeers who ‘own’ them, yes they are owned.  It was extremely hard for me to digest the fact that they too live in the same world that we live in, death would be the obvious choice for fortunate people like us, if we have to live their life even for a day.  More than once I simply closed the book and started to stare the skies without uttering a word, I just went blank, my thought process was empty, it was difficult for me to pick the book again and continue reading, such was the heaviness.  The author has tried to explain the point that humans will still be humans even in the worst living conditions, they don’t become animals, and their willingness to endure explains the human tenacity to survive even in a world that is unimaginably dark and ugly.


The story is quite descriptive about the way beggars are bought and sold, it reinstates the fact that human slave trade is still pertinent, in fact prominent, despite the social, cultural and economic change that we have all witnessed over the years.  Muthammai, a conspicuous character in the story is described as a heavy women with only one breast, dysfunctional legs, one arm, eyes that are almost covered by the thick flesh that hangs from her forehead and an inconceivable gory face.  Muthammai cannot move an inch on her own, she has to be carried.  She is forced to have sex with similarly handicapped ghastly beggars with an intent to produce more such filthy creatures, which are eventually sold or used as a tool for begging.  She refuses to breastfeed her 18th newborn which is yet another grim that is terribly handicapped, she is ruthlessly kicked by Pandaram, the one who owns Muthammai  and subsequently forced to feed.  
 

The shockwave started there and continued till the time I completed reading the book.  Beggars are transported like garbage from one place to another, the organs of a relatively healthy beggar Thorrapu is sold to a hospital, a female beggar Errukku who has a broken spine is picked and brutally raped by policemen and thrown out, she is picked from the streets by an NGO, Murugan an employee of the  Pandaram fraternity, ties knot to make the officials believe that she is his wife, only to make her beg on the streets again, yet she considers him as her husband from then on. 


The author also takes us through the other side of their miserable lives, they laugh, they cry, they love, crack jokes and make fun.  They even feel sorry for their shabby bossPandaram when his daughter runs away with a local goon, they console him, overlooking all his brutalities.  They seem to live a content, happy life in spite of being fed only once a day that too with leftover rotten food sourced from local hotels and made to stay in conditions that we can’t imagine of.  Regardless of all the ugliness, they still continue to live ashumans with all emotions like that of those in the normal world.  It was an overwhelming experience to read about their happiness.


Pandaram, who makes his living by managing a gang of ill-fated beggars, is a staunch devotee of Lord Muruga, his day begins with the darshan of his favorite deity.  Pandaramabsolutely has no regrets nor guilt for making money at the cost of sufferings of the hapless beings.  On the contrary, he happens to be a loving husband, a caring father of three children.  He travels all the way to nearby town to buy bangles in the middle of the night to make his daughter happy.  From his perspective, he is a god fearing, honest and humble person.  He does not even consider the beggars as human beings, hence turns a blind eye to their sufferings and leads a guilt free life.

Over the years  Pandaram sells all the 18 babies of Muthammai, but still her love for her kids never fade, she once says to Errukku that while breastfeeding a newborn, she feels as if the baby is trying to say something to her.  Her only wish in life is to have sexual intercourse with a ‘normal’ man and give birth to a healthy baby with no abnormalities.  The story begins with Muthammai giving birth to her 18th dislodged kid and ends with her being brutally raped in a marshland by another disfigured beggar bought by Pandaram for the lone reason, who unfortunately happens to be one of her own 18 kids that she had given birth to.  She identifies the man to be one of her own children (hunch back, blind and one finger in the place of the hand).  Her screams and scrambles fall into deaf ears and the story ends..  Heaviness in my heart as I write this, I was dumbfounded, it took me 2 to 3 days to come out of the intensity.


Ezam Ulagam is a novel that has to be read by everyone, the only hindrance while reading this book is the colloquial Tamil in which the book is written, author has extensively used Kanyakumari slang which is a blend of Tamil and Malayalam, it makes it difficult for an average Tamil reader but we get used to it after the initial chapters.  Please do not restrain from reading this book just because of its dark and intense content.  After reading this book, there is bound to be a change in our individual perspective towards life, you feel blessed and start to realize the value of life.  My biggest takeaway after reading Ezhan Ulagam, “someone out there is a lot more happy with a lot less than what you have”, appreciate what you have rather being unhappy over things that you don’t. 

A change within us becomes imminent after reading Ezham Ulagam

http://hari-bala.blogspot.in/2013/04/ezham-ulagam-dark-territory.html

ரகு -விமர்சனம்

சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் பிச்சைக்காரர்கள் உருவாக வழி செய்ததாக டாக்டர்கள் மீது புகார் எழுந்ததுபொதுமக்கள் மனதில் கழிவிரக்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் ஒரு சில ரூபாய்களைப் பெறுவதே பிச்சைக்காரர்களின் நோக்கம்.திடகாத்திரமாக இருப்பதாகத் தோன்றினால் பிச்சை போட எவருக்கும் மனம் வராது.ஒன்றுமே செய்ய இயலாத ஊனம்கண் பார்வை மட்டுமின்றி கண்ணே இல்லாமல் இருத்தல் போன்றவை நம் மனதை குலுங்கச் செய்து நாம் நன்றாக இருக்கிறோமே என்ற நிம்மதிக்காக பிச்சையிட வைக்கிறதுஇதனால் பிச்சை எடுக்க முடிவு செய்வோருக்கு கைகால்களை வலியில்லாமல் அறுவைச்சிகிச்சை மூலம் வெட்டி எடுத்து முடமாக்கி அதன் மூலம் நல்ல வருமானம் பார்த்ததாக மும்பை மருத்துவர்கள் சிலர் மீது புகார் எழுந்தது.
முன்பொரு காலத்தில் ராப்பிச்சைக்காரர்கள் என்போர் இரவில் வந்து சோறு வாங்கிச் செல்வர்அவர்களுக்காகவே வீடுகளில் மீதியான உணவை சேர்த்து வைத்துப் போடுவதை அறிவோம்ஆனால் இன்று யாரும் பழையசோறு கேட்டு பிச்சை எடுப்பதில்லைகாசுதான் வேண்டும் என்று கேட்கிறார்கள்இந்த பொருளியல் மாற்றம் அவர்களின் தேவை சார்ந்து எழுந்ததாகத் தெரியவில்லைஉணவுதான் பிரச்னை என்றால் அதற்கு தகுந்த பிச்சை போதும்ஆனால் அதையும் மீறி அவர்கள் பணம் சேர்க்கும் ஒரு தொழிலாகப் பார்க்கும் பொருளியல் பார்வை வந்ததற்கு அவர்கள் மட்டுமே காரணம் என்று கூற முடியாதுஅவர்களை வைத்து இயக்கும் மனிதக் கும்பலின் கூட்டு மனமே காரணம்.
ஓரிரு வருடங்களுக்கு முன் திருச்சியில் பிச்சைக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையின்போது ஒருவரின் அழுக்கு மூட்டைப் பிரிந்து விழுந்ததில் ஏராளமான ரூபாய் நோட்டுக் கட்டுகள் அழுக்கடைந்து கிடந்ததும்அதில் பாரத ஸ்டேட் வங்கியின் சேமிப்புக் கணக்குப் புத்தகம் இருந்ததும் அதில் சில லட்சங்கள் இருப்பு இருந்ததும் தெரிந்து அப்பகுதியினர் ஆச்சரியமடைந்தனர்தொழில் நிறைந்த திருப்பூரில் எப்போதும் ஆட்களுக்கு தேவை இருக்கிறதுஆனால் அங்கும் பேருந்து நிலையத்தில் குழந்தைகளுடன் பிச்சை எடுப்போர் ஏராளம்ஆக வயிற்றுப்பாடு மட்டுமல்ல அவர்களின் தேவைஅவர்களுக்குப் பின்னால் யாரோ இருந்து இயக்குகிறார்கள் என்பதே அதன் பொருள்.
ஜெயமோகன் எழுதிய ஏழாம் உலகம்” நாமறியாத ஓர் இருள் சூழ்ந்த உலகத்திலிருந்து அள்ளி கையில் கொடுத்த கைப்பள்ளத்து நீர்அதன் இயல்பே அந்த இருண்ட உலகத்தின் மொத்த உருவத்தின் பிரதிநிதியாக இருக்கிறது.
போத்திவேலுப் பண்டாரம் தான் நாவலை இயக்கிச் செல்பவர்ஆனால் நாவல் முழுக்க அவர் மீது வெறுப்புக்கும் பரிவுக்கும் இடைப்பட்ட ஒரு உணர்வே வருகிறதுஅவருக்கு பிச்சை எடுப்பதுதான் தொழில்அதாவது அடுத்தவர்களை பிச்சை எடுக்க வைத்து அதன் மூலம் வருமானம் பார்ப்பதுஅவரைப் பொருத்தவரை நாய் விற்ற காசு குரைக்காதுமனிதப் பதர்களும்நோயுற்றவர்களும்குறை பிறவிகளும்எதற்குமே பயன்படாதவர்கள் என்று சமுதாயத்தில் இருந்து வெளித்தள்ளப்பட்டவர்களுமே அவரது மூலதனம்அவரைப் பொருத்தவரை அந்த மனிதர்கள் எல்லாம் வெறும் உருப்படிகள்சதைப் பிண்டங்கள்அவர்களை பிச்சை எடுக்க வைத்து அந்தப் பணத்தில் ஜீவனம் செய்வதே அவர் வணிகம்.
எந்த ஒரு வணிகத்திலும் வாங்குவதும் விற்பதும் உண்டு என்பது போல இதில் உள்ளதுஉருப்படிகளை மற்றொரு எஜமானனுக்கு விற்பதுஅங்கிருக்கும் உருப்படிகளை மாற்றிக் கொள்வதுவிருப்பமான உருப்படிகளை விற்க யோசிப்பது,அதிக வருமானத்தை (பிச்சை!) தரும் உருப்படியை அது ஐஸ்வர்யம்லா” என்று அதிகப் பேரத்துடன் விற்பது என்று இந்த வியாபாரத்திலும் எல்லாம் சகஜமாக நடக்கிறது.
முத்தம்மை ஒரு சதைப் பிண்டம் மட்டுமல்ல வியாபாரத்துக்குத் தேவையான உருப்படிகளைப் பெற்றுத் தரும் ஒரு பார்க்க சகிக்காத ஒரு சதை இயந்திரம்ஆனால் அவள் ஒரு தாய். 18 உருப்படிகளைப் பெற்ற தாய்அதற்காகவே அவளை பிச்சை எடுக்க வைத்திருக்கிறார் போத்திவேலு பண்டாரம்அவளுக்கென்று ஒரு கணவன் ஒற்றைக் கண்ணுடனோமண்டை பெருத்தவனோகைகள் இல்லாமல் இடுப்புக்குக் கீழே ஆணுறுப்பு மட்டுமே கொண்டவனோ கொண்டுவரப்படுவான்அவனுடன் மாடு சினைப்பிடிக்க வைப்பது போல அணையவிடுவார் போத்திவேலுபிறகு அவள் சினைப்பிடித்து ஒரு குட்டியை ஈனுவாள்அதுவும் கையில்லாமலோஒற்றை விரலுடனோகால்கள் வளைந்து நடக்க முடியாமலோ….என்று பிறந்திருக்கும்.பின்னொரு நாள் அதன் மூலம் வருமானம் பெருகும்.
இது எதுவும் பண்டாரத்துக்கோ அல்லது அவர் மனைவி ஏக்கியம்மைக்கோ,குழந்தைகள் சுப்பம்மைமீனாட்சிவடிவம்மைக்கோ அவமானமாகவோ அருவெறுப்பாகவோ இருப்பதில்லைநாம யாருக்கு எந்தக் கெடுதலும் செய்யலையாருக்கும் குறையும் வைக்கிறதில்லையே என்று தன் பெண்ணின் கல்யாணத்தில் ஏற்படும் பிரச்னையின்போது ஏக்கியம்மை கூறுவதிலிருந்தேஅவள் தன் கணவனின் ஜீவனத்தை ஒரு மளிகைக் கடைஹோட்டல் கடை வியாபாரம் போல எண்ணி சாதாரணமாக எடுத்துக் கொள்கிறாள் என்பது மனதை அதிர்ச்சியடைய வைக்கிறது.இதெல்லாம் ஒரு பொழப்பா என்ற கேள்விக்கே பண்டாரத்தின் குடும்பத்திலும் மனதிலும் இடமில்லைஇதுவும் ஒரு பொழப்புதான் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.
உருப்படிகளை பழனிக்கு வியாபாரத்துக்கு (பிச்சை எடுக்ககொண்டு செல்லும்போது டெம்போவில் ஏற்றப்படுகின்றனவெறும் சதைச் சக்கைகள் அவைஅவர்களை கொண்டு செல்லும் போது ஏற்படும் மனபிம்பமே உறைய வைக்கிறதுஅவர்கள் மீது பண்டாரமும் அவர் அடியாட்கள் பெருமாள்வண்டிமலை ஆகியோர் செலுத்தும் அதிகார வன்முறையும் இப்படியும் ஓருலகம் சுழல்கிறது என்ற ஒரு விரக்தி எண்ணம் சூழச் செய்கிறது.
ராமப்பன்குய்யன்தொரப்பன்மாங்காண்டி சாமி,  எருக்கு, ஆங்கிலம்  பேசும் அகமது குட்டி என்று செல்லும் உருப்படிகளின் பெயர் வெறும் பெயர்கள் மட்டுமல்ல.வருமானம் தரும் சதைப்பிண்டங்கள் மட்டுமல்ல அவைசாதாரண மனிதர்களின் உணர்வுகளை விட எந்த அளவும் குறையாத உணர்வுகளைக் கொண்ட அதி அற்புத ஜீவன்கள்.
பாயசம்நல்ல சோறுதான் தன் வாழ்நாளின் கனவாகக் கொண்டிருக்கும் குய்யன்.ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு கையைக் கழுவாமல் வருவது எதற்காகஒரு வேளை உணவல்லஒரே முறை உணவுதான்.
எவ்வளவு சொகுசு செய்துவைத்தாலும் வாங்கிச் செல்லப்பட்ட இடத்தில் பாட்டுப் பாட மாங்காண்டி சாமி மறுக்கிறதுஎவருடைய அதிகாரமும் எல்லா இடத்திலும் செல்லுபடியாவதில்லை என்பதை உணர்த்துகிறார்மாங்காண்டி சாமி பாடும் பாட்டைக் கேட்டு அவரை ஒரு ஆஸ்ரமத்தில் அமர்த்தி ஆன்மிக பிச்சைக்காரனாக்க முடிவு செய்து ஸ்ரீகண்டன் நாயர் வாங்கிச் செல்கிறான்ஆனால் சில மாதங்கள் கழித்து பண்டாரம் அறியும் செய்தி வேறு மாதிரியாகிறது.
சாமி இப்ப வலிய தெய்வம்லா
உலக்க மூடுவோய்அது அன்னைக்கு பாடின பாட்டைக் கேட்டாக்கும் ஸ்ரீகண்டன் அதை வேங்கினதுஇப்ப மாசம் எட்டாகுதுஆரைப் பாத்தாலும் ஒரே வரிதான்அய்யா சாமி பிச்ச போடுங்கய்யா சாமிநாறிப் போச்சுநாறிப் போச்சுண்ணா அப்பிடி நாறிப்போச்சு.”
சாமியா” என்றார் பண்டாரம்.
ஆமடே..உம்ம சாமிதான்
ஆனால் மீண்டும் அதை பண்டாரம் வாங்கி வந்து வைத்த பின்னர் சாமி இயல்புக்கு வந்துவிடுகிறதுகடைசியில் பாட்டுப் பாடுகிறதுஅதன் இயல்பு பணத்துக்கோ அதிகாரத்துக்கோ கட்டுப்படுவதல்லபிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கும் அன்பெனும் பேரொளிக்குக் கட்டுப்படுவது.
பன்றிகள் மேயும்மலம் குவிந்து கிடக்கும் பாலத்தினடியில் மீண்டும் ஒரு உருப்படியைப் பெற முத்தம்மையுடன் அணைய விடும் ஒரு சிறுவனைக் கண்டதும் அய்யோ வேண்டாம் ஒத்த விரலு ஒத்த விரலு என்று கதறும் முத்தம்மையின் குரல் ஏழாம் உலகமான பாதாள லோகத்தை நோக்கி விரியும் இருண்ட உலகத்தின் ஒரு கண்ணிதான்.
வெண்ணிலா அறியாதோ
    வெந்துருகும் எம்மனசை?
விண்ணுக்குப் போகாதோ
   விம்மி அழுவதெல்லாம்?
சொன்ன சொல்லை மறப்பாரோ
   சொந்தமிதை விடுவாரோ?
என்னவென்று எண்ணியெண்ணி
   ஏங்கிடுவேன் வெண்ணிலாவே
என்று இறுதியில் பாடுகிறார் மாங்காண்டி சாமிநாவல் மொத்தத்தின் சாரமே அது.
வியாபாரத்துக்குச் சென்ற இடத்தில் கண்டபடி களித்ததின் விளைவாக எய்ட்ஸின் உள்ளே நுழைகிறார் பண்டாரம்திருமணத்துக்கு வைத்திருந்த நகைபணத்தை எடுத்துக் கொண்டு ரௌடியுடன் ஓடுகிறாள் வடிவம்மைஅங்கு விபசாரம் நடக்கும் வீட்டிலே சந்தோஷமாக இருப்பதாக அறிந்து நொந்து போகிறார்திருமணமாகி கணவன் வீடு செல்லும் மகள் சுப்பம்மை நகைக்காக பண்டாரத்திடம் சண்டைப் போடுகிறாள்.
பிச்சையிடுதல் என்பதை தர்ம காரியமாக நினைத்திருக்கும் மரபு மனத்தின் பழந்தரிசனங்களை தீவிரமாக அடித்து உடைக்கிறது இந்நாவல்.
வாழ்வின் சாரம் என்னஎதற்காக இந்தப் பாடுகுறை பிறவிகளை வைத்து சம்பாதித்த பணத்தால் என்ன பயன்தன் குடும்பம்தன் உடல்நலம் எல்லாவற்றையும் குறையுடன் இருக்க வைத்துவிட்டது என்ற எண்ணம் போத்திவேலுப் பண்டாரத்துக்கு தோன்றியிருக்குமா என்று தெரியாதுஆனால் அந்தக் கேள்விகளை வாசகனுக்குள் எழுப்பி ஒரு இருண்ட வாழ்வின் தரிசனத்தை ஓயாமல் கொடுக்கிறது ஏழாம் உலகம்.
http://writerragu.wordpress.com/2013/04/17/%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/

’இவன் சிவன்’ விமர்சனம்

வாசிப்பு எப்போதும் சுகந்தமானது. அதுவும் ஜெயமோகன் போன்ற 'எழுத்து அரக்கர்களை' வாசித்தால் ரெண்டு நாள் யாரிடமும் பேசத்தோன்றுவதில்லை. 'நான் கடவுள்' படம் வந்து ஓடிக்கொண்டிருந்த சமயம் அது. நான்கு முறை பார்த்து முடித்திருந்தேன். நண்பர்கள் சிலர் என் மனநிலையை சந்தேகித்து கொண்டிருந்தார்கள். அப்போது தான் படத்தின் முக்கியமான பகுதி ஏழாம் உலகம் நாவலின் தழுவல் என்று கேள்விப்பட்டேன். படத்தின் வசனகர்த்தா ஜெ.மோ தான் ஏழாம் உலகத்தின் சிருஷ்டி கர்த்தா என்பதும் தெரிந்தது.மிகச்சமீபத்தில் தான் நாவலை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிரண்டு போனேன்.தமிழில் இப்படிக்கூட எழுத ஆள் இருக்கிறார்களா??

சபிக்கப்பட்டவர்களின் உலகமே இந்த ஏழாம் உலகம் என்பது முன்னுரையிலும்,அட்டை விளம்பரங்களிலும் நமக்கு சொல்லப்பட்டுவிடும். நாம் எல்லா கூட்டங்களிலும்,கோவில்களுக்கு வெளியேயும்,வீதிகளிலும் உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்களை தினமும் பார்க்கிறோம். என்றாவுது இவர்கள் எங்கே வசிக்கிறார்கள்? எப்படி தூங்குகிறார்கள்?, இவர்களுக்கு காதல் இருக்கிறதா?, குழந்தைகள் உண்டா என்பதெல்லாம் யோசித்ததுண்டா.. இல்லை என்பதே நம்முள் அனேக பேரின் பதிலாய் இருக்கும். இந்த நாவலில் ஜெ.மோ நம்மை இவர்கள்உலகத்துக்கு அழைத்துப்போகிறார்.உண்மையில் இழுத்து போகிறார் என்றே சொல்லவேண்டியிருக்கிறது. நாவலை வாசித்து முடிந்தவுடன் எல்லார்மனதிலும் ஒரு குற்றவுணர்வு வருவதை தடுக்க இயலாது. ஆங்காங்கே சில சித்தாந்தங்களையும் தெளிக்கத் தவரவில்லை ஜெ. நான் கடவுளில் ஒரு காட்சி. அகோரியான ருத்ரன் நள்ளிரவில் கோவிலுக்கு வெளியே நிறைய 'சாமிகளுடன்' கஞ்சா இழுத்து கொண்டிருப்பார். சுருட்டை பற்ற வைக்க ,கோவிலில் உள்ள தீபத்தை உபயோகிக்கப்போவார். ஒரு சாமி ,'அது கோயில் தீபம்' என ருத்ரனைபார்த்துப் பதறுவார். உடனே ருத்ரன் 'தீயில என்னடா நல்லது?? கெட்டது??' என கேட்பான். தியேட்டரில் பலத்த கைதட்டல் இந்த காட்சிக்கு. இப்படி அடர்த்தியான அர்த்தங்களை ஒரே வரியில் சொல்வது அரிது.


படத்திலும் நாவலிலும் சிலாகிக்க வேண்டிய இன்னொரு விஷயம் எந்த இடத்திலுமே போதனைகள் இல்லை. புரட்சி வசனங்கள் இல்லை. காட்சிகள் எதார்த்தமாய் அணுகப்படுகிறது. ருத்ரன் என்ற அகோரியை ஏழாம் உலகத்தில் சேர்த்துக் கொண்டுவிட்டார் பாலா.உண்மையில் இந்த படத்திற்கு பாலாவிற்கு தேசிய விருது கிடைக்காமல் போயிருந்தால் தான் ஆச்சர்யமாய் இருந்திருக்கும்.உடல் சவால் நிறைந்தவர்களை படம் முழுக்க நடிக்க வைத்திருப்பதின் பின்னணியில் கண்டிப்பாய் நிறைய உழைப்பு இருந்திருக்க வேண்டும்.

சினிமா என்றாலே அழகியல் சமாச்சாரங்கள், பதுமை பெண்கள், எழிலான காட்சிகள் என்ற கோட்டை தாண்டி ,ரோட்டில் எதெல்லாம் பார்க்க தயங்குகிறோமோ அதையே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பூஜா கடைசியில் பேசும் அந்த வசனம் அவ்வளவு கூர்மையாய் இருக்கும். இவ்வளவு நாள் நாம் கட்டி வைத்திருக்கும் நம்பிக்கைகள் எல்லாத்தையும் 'கட்டுடைத்தல்' செய்யும்.இரவில் படம் பார்க்கும் பட்சத்தில் தூங்க நெடு நேரம் ஆகும்.


விந்தணுவில் இருந்து புறப்பட்டு கருமுட்டையில் இணைந்து உருவாகும் 'உயிர்' , யாராய் பிறக்கும்?, யாருக்கு பிறக்கும்? என்பதெல்லாம் கடவுளின் சித்தம் என்கிறோம். அப்படி பூமியில் உயிராய் ஜீவிப்போர் கொடூரமான வறுமையிலோ, தாங்கொனா உடல் கோளாறிலோ பிறப்பது யாரின் சித்தம். ரோட்டில் அழுக்கு உடையுடன், பரட்டை தலை, ஒழுகும் மூக்குடன் பிச்சை எடுக்கும் சிறுவன் , ஐஸ்க்ரீம் பார்லர்களில் அமர்ந்து 'Chocobar'களை சுவைக்கும் குழந்தையை ஏக்கமாய் பார்க்கும் காட்சி பெரு நகரங்களில் தினமும்பார்க்கலாம். நாவலில் முத்தம்மை என்ற ஊனமுற்ற பெண்ணுக்கு பிரசவ நிகழ்வு தான் முதல் பகுதி. இந்த இடத்திலேயே மிரட்டி விடுகிறார் ஜெ.மோ. ' கதையில் கதா பாத்திரம் பீடி புகைத்தால் அந்த வாடையை வாசகனும் உணரனும்' விளக்கங்கள்,உவமானங்கள் பற்றி ஜெயகாந்தன் ஒருமுறை இப்படி சொன்னார். இங்க நம்ம ஜெ.மோ கிட்டத்தட்ட எல்லா பகுதிகளிலும் நம் மூக்கையும் வேலை செய்ய வைக்கிறார். இது பல இடங்களில் நமக்கு அருவருப்பை தருகிறது. உண்மையாய் சொன்னால் 'ஏழாம் உலகம்' என்ற முரட்டு கள்ளில் நிறைய தண்ணீர் ஊற்றியே பாலா கொடுத்திருக்கிறார். உருப்படிகளை வைத்து தொழில் நடத்தும் போத்திபண்டாரம், சித்தர் பாட்டுகளை பாடும் மாங்காண்டி சாமி, குசும்பு பிடித்த குய்யன், எருக்கு, முத்தம்மை என கதா பாத்திரங்களை வைத்து ஏழாம்
உலகத்தில் ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார்.



எப்போதும் நகைச்சுவையாய் பேசும் குய்யன் கதாபாத்திரம் மறக்க முடியாதது. பழனி அடிவாரத்தில் போத்திபண்டாரம் செய்யும் 'உருப்படி' வியாபாரத்தில் ஒருவன் இந்த குய்யன். இரண்டடியில் கால சூம்பிபோய் இருப்பவன். தன் முதலாளி பெண் கல்யாணத்தில் இலை போட்டு, வெள்ளை சாதம் வைத்து நல்ல குழம்பு ஊற்றி சாப்பிடலாம்.பாயாசம் வேறு கிடைக்கும் என சொல்லிக்கொண்டே இருப்பான்.தான் இதுக்கு முன்னாடி ஒருமுறை அப்பிடி சாப்பிட்டு இருப்பதாகவும் சொல்லுவான். கடைசியில் முதலாளி வீட்டு சாப்பாடு கிடைக்காமல் போக, குய்யன் ஏங்கி அழுவான். அவன் சுவற்றில் தலையை முட்டிக்கொண்டு அழுவது கொஞ்சம் நம்மையும் 'அசைத்து' பார்க்கும்.நமக்கு தினம் கிடைக்கும் சாப்பாடு சிலருக்கு இன்னும் கனவாகவே இருக்கிறது என்கிற உண்மை முகத்தில் 'சடார்' எனஅடிக்கும் இடம் இது.


உண்மைகள் அம்மனமானவை. அவைகள் எப்போதும் நம்மை சங்கடப்படுத்தும்.ஏழாம் உலகம் அதே போன்ற அனுபவத்தை தான் நமக்கு கொடுக்கும். படித்து முடித்தவுடன் 'கரண்ட் பாதி நேரம் இருக்கிறதே இல்லை', 'ஆபீஸ்ல உயிர வாங்குரானுங்க', 'இதே தோசையே எத்தன நாளைக்கு சாப்புடுறது' போன்ற புலம்பல்களை எல்லாம் கண்டிப்பாய் குறைத்துக்கொள்வோம். வானத்தை அன்னாந்து பார்த்து ஏங்கிக்கொண்டிருப்பவர்களை ,நமக்கு கீழே நசுங்கிகிடக்கும் உலகத்தை பார்க்க வைக்கிறார்கள்.

http://sivarajkamaraj.blogspot.in/2010/08/blog-post_17.html

அருண்மொழித்தேவன் விமர்சனம்

சென்ற முறை நடந்த புத்தக கண்காட்சியில் இந்த புத்தகத்தை வாங்க முடியாமல் போனது. தமிழினி பதிப்பகத்தில் புத்தகம் இல்லை என்று சொல்லி விட்டார்கள். நண்பரும் பதிவருமான கார்த்திகேயன் தன்னிடம் இருந்த புத்தகத்தை எனக்கு தருவதாக சொன்னார், சென்ற முறை அவர் இந்தியா வந்த பொழுது அவரை சந்திக்க முடியாம போனதால் கொஞ்சம் ஏமாற்றம் மிஞ்சியது. கிழக்கு பதிபக்கதில் ஏதேனும்  புதிய வரவுகள் வந்து இருக்கிறதா என்று பார்க்க சென்ற போது பெரும் ஆச்சரியம் காத்து கொண்டு இருந்தது எனக்கு. ஏழாம் உலகம் புதிய பதிப்பை வெளியிட்டு இருந்தார்கள். முகப்பு அட்டையில்  ஒரு மனித முகம் உருகுவது போல இருக்கிறது, புத்தகத்தை படித்த பிறகு அதில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்வும் இதே போல தான் உருகி கொண்டு இருக்கிறது என்கிற உண்மை தோன்றியது. படித்து முடித்து இரண்டு நாட்களாக முத்தமையின் கதறலில் இருந்து விடுபடமுடியவில்லை.


முதல் அத்தியாயம் படிக்கும் பொழுது மிக சிரமமாக இருந்தது, நாகர்கோயில் வட்டார வழக்கில் சிக்கி திணறி ஐயோ முதல் அத்தியாயமே இவ்வளவு கஷ்டமா இருக்கே என்று புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன். அடுத்தநாள் மீண்டும் முதலில் இருந்து படிக்க ஆரமித்தேன் கொஞ்சம் போல புரிய ஆரமித்தது. மீள் வாசிப்பின் முலமே சில அத்தியாங்கள் எனக்கு புரியவந்தது. புத்தகத்தை படித்து முடிகையில் கடைசி பக்கத்தில் அகராதி இருக்கிறது, வட்டார வழக்கில் இருக்கும் சொற்களை எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் அதன் அர்த்தங்களை வகைப்படுத்தி உள்ளார்கள். இது தெரியாமல் நாகர்கோவிலில் இருக்கும் நண்பனுக்கு போன் பண்ணி அர்த்தம் புரியாத வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டு கேட்டு அவன் உயிரை வாங்கினேன்.


நாவலில் உள்ள சில கதாபத்திரங்களை இங்கே அறிமுகம் (வேண்டாம் ஹ்ம்ம் இருக்கட்டும்) அறிமுகமே செய்கிறேன். 

பண்டாரம் இந்த நாவலின் கதாநாயகனும் வில்லனும் அவனே. முழுநேர தொழில் உடல் குறைபாடு உள்ளவர்களை பிச்சை எடுக்க வைத்து அவர்களின் மூலம் தன்னை  வளர்த்து கொண்டவன். பண்டாரத்துக்கு மனைவி மற்றும் மூன்று மகள்கள். மகள்கள் மேல் அதிக பாசம் உள்ளவன், சின்னவள் கேட்ட வளயலுக்காக ஆசாரி வீட்டுக்கு நாடு இரவில் சென்று வாங்கி வருவதும், இரண்டாவது மகளை பார்க்க கால்கடுக்க நிற்பதும், அவளின் அலைசிய பார்வையை கண்டு ஒரு அப்பனாக உருகுவதும்.  மூத்த மகள் திருமண நாள் அன்று அவள் கேட்ட மாங்கா வைத்த நெக்லஸ் அப்பறம் வாங்கி தருவதாக கெஞ்சுவது. முத்தமையின் பிள்ளையை பாலிதீன் கவரில் போட்டு வைத்து பக்கத்தில் துணியை விரித்து வைப்பது.  எதற்கு எடுத்தாலும் அப்பனே முருகா,  ஞானபண்டிதா என்று உருகுவது. எல்லா வகை உணர்ச்சிகளையும் ஒரே மனிதனை கொண்டு ஆசிரியர் அசத்தியுள்ளார்.

போத்தி -  பண்டாரம் செல்லும் முருகன் கோவில் பூசாரி. கோவில் கருவறையில் எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது அதற்கு இவர் சொல்லும் காரணம் எல்லாம் படிக்கும் போது இனி சுவாமிக்கு செய்யும் எந்த ஒரு தீர்த்ததையும் கையில் கூட தொட கூடாது என்று முடிவு செய்தேன். பண்டாரம் மிகவும் கவலையா இருக்கும் சமயத்தில் அவருக்கு ஆறுதல் சொல்லி அவரை தேர்த்துவதும், கல்யாண மண்டபத்தில் பெண்ணின் அம்மையை அதட்டி அடக்கி வைப்பது என்று ஒரு தேர்ந்த நண்பனை போல பண்டாரத்தின் உடன் வந்து அனைத்தையும் முன்னின்று நடத்துகிறார். முத்தமையை முழுவதுமாக பார்க்கவும் ஆசைப்படுகிறார்.
முத்தம்மை.... என்னில் நீங்காமல் இருக்கும் அற்ப ஜீவன். முத்தமையை உருவத்தை ஆசிரியர் இப்படி வர்ணிக்கிறார் ( ஒரு மிகபெரிய வினோத பிராணி போலிருந்தாள். ஒரு கையும் ஒரு காலும் பெரிதாக திடமாக இருந்தன. இன்னொரு கையும் காலும் சூம்பி ஒரு வயது குழந்தையின் கைகால்கள் போல. முடியற்ற மிக பெரிய தலை ஒரு பக்கமாக சப்பியிருந்தது. ஒரே கண்தான். மறு கண்குழியில் ததும்பும் வெறும் சதையுருளை. முக்குக்குப் பதில் இரு சிறுகுழிகள். பெரிய வாயில் நான்கு பாக்கணும் சிதறிப் பரவிய நீண்ட மஞ்சள் பற்கள். வயிறு பெரிதாக உப்பி பளபளப்புடன் சற்று தழைந்து நின்றது. தொப்புள் விரிந்து ஒரு கறைபோல ஆகிவிட்டிருந்தது) இந்த பத்தியை படித்து கொஞ்ச நேரம் கண்ணை மூடி கொண்டு அந்த தோற்றம் எப்படி இருக்கும் என்று  யோசித்து பார்த்தேன் உடல் ஏதோ ஒரு வித அதிர்வலையை சந்தித்தது. ஏன் பிறந்தோம் என்று தெரியாமல் எதற்கு பெற்றோம், பெற்றது எல்லாம் எங்கே  என்றும் தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருந்த ஒரு சவம். பண்டாரத்தின் அட்சயபாத்திரம், பதினெட்டு வருடங்களில் பதினேழு பிள்ளைகளை பெற்றுடுத்து ஒன்று கூட தன்னுடன் இல்லாது நினைத்து நினைத்து ஏங்குகிறாள். கடைசியாக பிறந்த ரசினிகாந்த் கூட சில நாட்களில் பண்டாரம் வேறு ஒருவனிடம் விற்றுவிடுகிறான். மனதை கனக்க செய்யும் கடைசி அத்தியாத்துக்கு முந்தினது படித்து முடித்த போது முத்தம்மை என்னை முழுவதுமாக ஆக்கிரமித்துவிட்டாள்.  படித்து முடித்து மூன்று நாட்கள் என்னால் அவளின் கதறலில் இருந்து விடுபடமுடியவில்லை. மனதை அழுக செய்த கொடுரம் அது. 


பெருமாள், வண்டிமலை, சிடேன் நாயர்,  அகமதுகுட்டி, ராமப்பன், நாயர், எருக்கு, ரசினிகாந்த், குருவி, குய்யன், தாணுபிள்ளை, மாங்காண்டி சாமி, கூனன், பிக் பாக்கெட் ஆசாமி, கொச்சன் என்று நிறைய நபர்கள் சுற்றி சுற்றி வருகிறார்கள். அனைவரை பற்றியும் தனி தனியா சொல்லி கொண்டு இருந்தால் நாவலின் சுவாரஸ்யம் போய்விடும்.

அவர்கள் பேசுவதை பக்கத்தில் இருந்து கேட்டுகொண்டு இருந்தது போல, பார்த்துகொண்டு இருப்பதை போல அவ்வளவு நெருக்கத்தில் உள்ளது ஜெமோவின் எழுத்துகள். இந்த தொழில் செய்யும் மனிதர்கள் தங்களது வருவாயை பெருக்க உருப்படிகளை எப்படி வாங்கி விக்கிறார்கள் என்றால்  ஏதோ மாட்டு சந்தையில் கறவை மாடு வாங்குவது போல இருக்கும் அவர்களின் பேசுக்கள். கேரளா ஆள் ஒருவன் அதில் வக்கீல் வேறு. 

நாவலில் வலிகள் அதிகமாக இருக்கிறது யாரவது ஒருவர் அழுதுகொண்டோ, அடிவாங்கிகொண்டோ இருகிறார்கள். நக்கலுக்கும் நையாண்டிக்கும் வஞ்சனை இல்லாமல் அள்ளி தெளித்து உள்ளார் . பிச்சைகாரர்கள் தானே என்று இருந்துவிடாமல் அவர்களிடம் இருக்கும் நையாண்டி, அழுகை, தெரிந்து வைத்துள்ள சட்டம் சில விஷயங்களை பற்றி பேசும் போது அவர்கள் பிச்சை எடுப்பவர்களா என்கிற சந்தேகம் வருகிறது.  முத்தமைக்கு பிறந்த குழந்தையை ரசினிகாந்த் என்று அழைப்பதும், அவளை புணரும் அந்த ஒத்தவிரல் கூனனை கமல்காசன் என்று தமிழ் சினிமா ஹீரோகளை சிலரை ஆங்காங்கே நாவலில் இழுத்து விட்டு இருக்கிறார். ஒடுக்கப்பட்ட மனிதர்களின் வாழ்வை இவ்வளவு நெருக்கத்தில் இருந்து பதிவு செய்து இருப்பதே மிக பெரிய ஆச்சரியம், ஜெமோ அதை அற்புதமாக செய்துள்ளார்.  

நாவலின் குறை அந்த வட்டார வழக்கு நடைதான் ஆனால் அதுவே நிறைவும் கூட.  நிறைய இடங்களில் என்ன பேசுகிறார்கள் என்று படித்து புரிந்துகொள்வதற்கே பெரும் போராட்டமாக இருக்கிறது. முதலில் படிப்பவர்கள் புத்தகத்தின் கடைசியில் இருக்கும் அகராதியை முழுவதுமாக படித்து (முடிந்தால்) மனப்பாடம் செய்துவிட்டால் கொஞ்சம் சவ்கரியமாக இருக்கும் நாவல் படிக்கும் போது. கதாபாத்திரங்கள் பேசும் போது வாட்டர வழக்கில் இருக்கும் சம்பாஷனை, பத்தி என்று வரும் போது சாதாரண உரைநடையில் இருக்கிறது இது கொஞ்சம் ஆறுதல் தரும் விஷயமும் கூட.


மாங்காண்டி சாமி பாடும் இந்த பாடலுடன் நாவல் நிறைவுப்பெருகிறது.

வெண்ணிலா அறியாதோ
    வெந்துருகும் எம்மனசை?
விண்ணுக்குப் போகாதோ
    விம்மி அழுவதெல்லாம்?
சொன்ன சொல்லை மறப்பாரோ
    சொந்தமிதை விடுவாரோ
என்னவென்று எண்ணியெண்ணி
    ஏங்கிடுவேன் வெண்ணிலாவே'
முத்தமையின் கதறலுடன் துவங்கிய கதை அவளின் கதறலுடன்  முடிவடைகிறது. 

http://romeowrites.blogspot.in/2010/07/blog-post_06.html

அதிஷா விமர்சனம்

பழனிக்கு பாதயாத்திரை போவதென்றால் கேட்கவே வேண்டாம். எங்கள் நண்பர்களுக்கு பஞ்சாமிர்தம் சாப்பிடுவது மாதிரி! கையில் கம்போடு , தோளில் முருகன் படம் போட்ட மஞ்சள் அல்லது காவி தோள்பையோடு கிளம்பிவிடுவோம். 

அரைடிராயரோடு பொள்ளாச்சி-உடுமலைப்பேட்டை வயா பழநி இதுதான் எங்க ரூட்டு!. நடந்து கொண்டே இருக்க வேண்டியதுதான். பேருக்கு மாலை! நெற்றியில் பட்டை! ஒவ்வொரு முறை பழனிக்குப் போகும் போதும் எங்களுக்கு நண்பர்களாக இருந்தவர்கள் பழனிமலைப் படிக்கட்டு பிச்சைக்காரர்கள். சிலரை வருடந்தோறும் சந்திக்க நேரிடும். மிகமிக சுவாரஸ்யமான மனிதர்கள். அவர்களிடம்தான் கஞ்சா கிடைக்கும். நண்பர்களில் பலரும் அதற்காகவே பாதயாத்திரை வருவதும் உண்டு. 

நீளமான தாடி! கண்களில் லேசான போதை , காவி உடை, தரையில் சின்னதட்டு , முகத்தில் எகத்தாளமான பார்வை! இதுதான் பழனிமலை சாமியார்களின் உருவம்! விஷ்ணுவின் ஆனந்த சயனம் போல் படுத்திருக்கும் போஸைப் பார்த்தால் அடடா யாருக்குமே காட்சியளிக்காத சித்தர் பெருமானோ என்று நினைக்க தோன்றும். உண்மையில் அவர்களோடு கஞ்சா அடித்தபடி பேச்சுக்கொடுத்தால் சோகமான காமெடியான அசைபோடக்கூடிய ஆயிரமாயிரம் கதைகள் கிடைக்கும். பழனிமலை அடிவாரத்தில் இவர்களைபோன்ற பிச்சைகாரர்களுக்காவே நோட்டுகொடுத்தால் சில்லரை கொடுக்கும் சில்லரை விற்பனையாளர்களை பார்த்திருக்கிறேன். பத்துகாசுகளை பத்துரூபாய்க்கு நீளமாக அடுக்கி வைத்திருப்பார்கள். எனக்கும்கூட அப்படி ஒருமுறை நிறைய சில்லரை வாங்கி படிக்கொரு பிச்சைகாரருக்கும் காசு போட்டபடி மலையேற ஆசை இருந்தது. நல்ல வேளை காசில்லை.

பல கிலோமீட்டர்கள் நடந்து நடந்து கால்வலியோடு மலையேறாமல் இவர்களோடு அமர்ந்தபடி பேசிக்கொண்டிருப்போம்! முருகன் எங்கே போய்விடப்போகிறார்! காலை ஐந்து மணிக்கு முன்னால் போனால் ஆள் அரவம் இருக்காது சன்னிதானத்தில்! நான்,முருகன்,ஐயரு அவர்கைல இருக்கும் மணிமட்டும்தான் இருக்கும்.

இந்த சாமியார் பிச்சைகாரர்களின் பேச்சிலும் இறைவனைக்காணலாம். (கஞ்சா உதவியோடு!) ச்சும்மா பேசிக்கொண்டிருக்கும்போதே பல மாதம் குளித்திராத உடலிலிருந்து குமட்டும் துர்நாற்றமெடுக்கும். உடலில் ஏதாவது தீராத காயங்கள் இருந்தால் , துர்நாற்றமும் இருமடங்காகும். அதையும் மீறி அந்த மனிதர்களிடம் ஏதோ ஒரு சுவாரஸ்யம் ஒளிந்திருந்தது. அவர்களுக்கும் இளைப்பாறவும் எதையோ பகிர்ந்து கொள்ளவும் எங்களைப்போல இரண்டு பேர் தேவையாய் இருந்திருக்கலாம். ‘ அடேய் வினோத்து சின்ன உதவி பண்ணு! அப்படியே கீழால போனியின்னா கடலைமிட்டாய் விப்பான் நாலு வாங்கிக் குடேன் , அப்படியே நாலு பிளேன் சிசரு!’ பதினைந்து வயதில் கிடுகிடுவென வேகம்பிடித்து மலையடிவாரக்கடைக்கு ஓடுவேன். நாற்றமடிக்கும் சில்லரைகாசுகளை எண்ணிஎண்ணி கொடுப்பார் அந்த கிழவர். தப்பித்தவறியும் அதை முகர்ந்து பார்க்க மாட்டேன்!. அவருக்கு துணையாக காலில்லாத கிழவி , ஒருவயதான குழந்தை , உடல்ஊனமுற்ற மேலும் சிலர் என நிறைய நிறைய பேர் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பதை பார்த்திருக்கிறேன்.

அவர்களை கண்டால் எனக்கு அருவருப்பாக இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த வருடந்தோறும் சந்திக்கிற சாமியார் தாத்தாவிடம் கேட்பேன் ‘’ஏஞ்சாமி இவஙனுங்க்கூட உக்காந்திருக்கீங்.. அந்தல்ல போய் உக்காந்துக்கலாம்லோ’’ என்பேன் , அவிங்கதான்டா என் உறவுக்காரய்ங்க.. இதோ அங்கன இருக்கானே கால்சூம்பிப்போனவன் என் மொத மவன்.. இதா இங்கிட்டு கிடக்குல சின்னக்குட்டி இது என் பேத்தி என்று ஒவ்வொருவருக்கும் ஒரு உறவு முறை சொல்வார். நானும் கூட அதை உண்மையென்றே நம்பியிருக்கிறேன். அவர்கள் ஏன் பிச்சை எடுக்க வந்தார்கள் என்கிற கேள்வி மட்டுமே என்னிடம் இருந்தது. இரவில் எங்கே செல்வார்கள், எங்கு தூங்குவார்கள்.. காலில்லாத முடமான கண்தெரியாத இன்னும் இன்னும் எப்படி மேலே வந்தார்கள் தெரியாது! அவர்களுடைய வாழ்க்கை மர்மமானதாகத்தான் இருந்தது. நான் கேட்டதில்லை.

இந்த ஆண்டு ஜனவரி ஒன்று , புத்தாண்டு தினத்தில் பத்திரிகை வேலையாக பழனி செல்ல வேண்டியதாயிருந்தது. புது வருஷமும் அதுவுமா இவ்ளோதூரம் வந்துட்டோம் அப்படியே முருகன தரிசனம் பண்ணுவோம் என்றார் என்னோடு வந்திருந்த இன்னொருவர். கிளம்பினோம். கண்கள் படிகளையே மேய்ந்து கொண்டிருந்தது. ஒரு சாமியாரையும் காணவில்லை. கால்முடமான,கண்தெரியாத ம்ஹூம் யாருமேயில்லை. துடைத்து சுத்தமாக இருந்தது. கடைகள் இருந்தது. மற்றபடி யாருமே இல்லை. இது இந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த மாற்றம். அந்த பிச்சைகாரர்களும் சாமியார்களும் எங்கே? சிலரிடம் கேட்டபோது பிச்சை எடுக்க முழுத்தடையாம்! அவர்கள் எங்கே?

ஏழாம் உலகம் நாவல் இந்த பிச்சைக்காரர்களின் வாழ்வியலோடு பயணிக்கிறது. குறிப்பாக பழனி திருவிழாக்களுக்காக திரட்டி கொண்டுவந்து பிச்சையெடுக்க வைக்கப்படும் பிச்சைகாரர்கள் என்கிற உருப்படிகளின் வாழ்க்கை. உருப்படிகளான அங்கஹீனமான மனிதர்கள். அவர்களுக்கு ஆன்மா இல்லை... என்று கூறியபடியே அவர்களை வாங்கி விற்று வாடகைக்கு எடுத்து... உபயோகிக்கும் முதலாளி மனிதர்கள். உருப்படிகளை விற்கின்றனர். சிலர் வாங்குகின்றனர். உருப்படிகள் சம்பாத்தியம் தரும் அஃறிணைகளாக உலா வருகின்றன. உருப்படிகள் பிள்ளைப்பெற்றுத் தருகின்றன. உருப்படிகள் போடும் குட்டிகளும் விற்கப்படுகின்றன. மிகப்பெரிய சந்தை இதற்காக நாடுமுழுக்க இயங்குகிறது. உருப்படிகளால் வெளி உலகிற்கு தப்பிக்கவே முடியாத சந்தை! சிக்கிக்கொண்டால் மீளமுடியாத பாதாள உலகம்.

இங்கே நாம் அனைவரும் எதையாவது எப்போதும் விற்றுக்கொண்டிருக்கிறோம். நமக்கா சந்தை என்பதெல்லாம் போய் சந்தைக்கு நடுவில்தான் நாம் இருப்பதாக எண்ணுகிறேன். ஜெயமோகனின் இந்தக்கதையிலும் ஒவ்வொரு பாத்திரமும் எதையாவது விற்கிறது. உடல்சார்ந்த விற்பனை தொடர்ச்சியாக நடந்து கொண்டேயிருக்கிறது. எல்லோருக்குமே ஏதாவது தீராத ஆசை இருக்கிறது. அது கடைசி வரை நிறைவேறுவதேயில்லை. அல்லது நிறைவேறுகிறது. மற்றவர்களுக்கு தவறாக தெரிவது செய்பவருக்கு சரியாகத்தெரிகிறது. அதற்கான தர்க்கமும் இருக்கிறது.

பிச்சைக்காரர்களை வாங்கி விற்பதென்பது நமக்கு வேண்டுமானால் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.. ஆனால் சந்தையில் ஆடுமாடுகள் வாங்கி விற்பதைப்போன்றதொரு வியாபாரமாக , அனிச்சையான செயலாக அது ஒரு சமூகத்தில் குடும்பத்தில் சகஜமாக பேசிக்கொள்கிற சாதாரண விஷயமாக போய்விட்டிருக்கிறது. நாம் ஒவ்வொருவருமே ஏழாம் உலகத்தின் பாத்திரங்களைப்போல ஏதாவது ஒரு தவறுக்கு பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். அது தவறென்றே தெரியாமல் வாழப்பழகியிருக்கிறோம். போத்தி வேலு பண்டாரம் என்னதான் உருப்படிகளை விற்றாலும் , அவனுக்கும் குழந்தைகளை கடத்தி வந்து கண்ணைப்பிடுங்கி பிச்சை எடுக்கிற கும்பல் தவறானவர்களாக இருக்கின்றனர்.

இக்கதையின் ஒவ்வொரு பாத்திரமும் சமூகத்தின் குறியீடுகளாகவே உணர்கிறேன். முத்தம்மை பாத்திரம் ஒரு பக்கம் வீங்கியும், ஒருபக்கம் சூம்பியும் போன பெண்! தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வுக்கும், வன்முறைக்கும் ஆளாகிறாள். இருந்தும் தொடர்ச்சியாக பிள்ளை பெற்றுக்கொண்டேயிருக்கிறாள். அவளுக்கு ஒரே லட்சியம் முழு உடலும் உடல்நலமும் கொண்டவனோடு ஒருமுறையாவது புணரவேண்டும், முழு ஆரோக்கியத்தோடு பிள்ளை பெற வேண்டும் என்பது! குய்யன் என்றொரு பாத்திரம் அனைத்தையும் கேலிபேசிக்கொண்டேயிருக்கிறது. அவனுக்கு வாழ்க்கையின் ஒரே லட்சியம் நல்ல சோறு தின்பது! விரைவீங்கிப்போன ஒரு அறிவுஜீவி மலையாளி தொடர்ச்சியாக அனைவரையும் மிரட்டி உருட்டி காரியஞ்சாதிக்கிறான். சட்டம் பேசுகிறான்.. போத்திவேலுபண்டாரம் தன்னளவிற்கு நல்லவனாக வாழ முயற்சி செய்கிறான். கதை முழுக்க அவனோடு அவனுடைய சொல்லமுடியாத குற்ற உணர்ச்சியும் பாத்திரங்களாகவும் குறியீடுகளாகவும் வசனங்களாகவும் பயணிக்கிறது. நாம் எல்லோருமே பழக்கப்படுத்திய குற்றங்களை எந்த குற்ற உணர்வும் இல்லாமல் செய்தாலும் தொடர்ச்சியாக நாம் வாழ்க்கை முழுவதுமே குற்ற உணர்வோடு வாழ்வதாகவே உணர்கிறேன்! 

ஜெயமோகனின் பாத்திங்கள் ஒவ்வொன்றும் நம் உள்மன உணர்வின் பிரதிபலிப்பாக, நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிற விதவிதமான உணர்வுகளின் உருவங்களாக தெரிகின்றன. கிட்டத்தட்ட எல்லா பாத்திரங்களுமே!. கதை முழுக்க வன்முறையும், உறைந்து போன ரத்தமும், பிய்ந்து தொங்கும் சதையும் , காயத்தின் மீது செலுத்தப்படும் காய்ச்சிய ஈட்டியினால் உண்டாகும் வலியும் இன்னும் என்னவெல்லாமோ நிரம்ப நிரம்ப.. படிக்கும் நமக்கும் வலிக்கிறது. வலியும் வேதனையும் நிறைந்த புதிய உலகம்! நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத வாழ்வியல் , இவ்வளவு கோரமா என்று பதறவைக்கும் சூழல்.

நூலில் ஆங்காங்கே ஜெயமோகனின் சில்மிஷங்களும் சில்வண்டித்தனமான அரசியல் விமர்சனங்களும் கூட இருக்கிறது. மலையாளி ஒருவனிடம் உருப்படியை விற்க வருகிறான் தமிழ் முதலாளி. உருப்படி உருப்படி என்று பேசுகிறான்.. மலையாளியோ அப்படிலாம் சொல்லாத சகாவு என்று சொல்லு என்கிறான்.. சகாவு என்றால் தோழர்!(கம்யூனிசத்தோழர்). பிச்சைகார வியாபாரி ஒரு கம்யூனிஸ்டாகவும்... வாங்கிச்சென்ற கைகால் இல்லாத சாமியாரை வைத்தும் பிழைப்பு நடத்துபவனாகவும் சித்தரிக்கிறார். ஜெயமோகன் வசனங்களால் இந்துத்துவாவும் கம்யூனிசமும் ஒன்றென்கிறார்! இரண்டுமே மனித வியாபாரம் என்கிறார். கதையூனேடே இதுவும் கடந்து செல்கிறது. அதே போல ஊனமுள்ளவர்களுக்கு பிறக்கும் குழந்தை ஊனமாகத்தான் பிறக்கும் என்கிற மாபெரும் கண்டுபிடிப்பை உலகிற்கு கொடுக்கும் அறிவியலாளர் ஜெமோ! மிக மொன்னையான அவதானிப்பாகவே இதை எண்ணுகிறேன். மருத்துவர்கள் இதுகுறித்து விளக்க வேண்டும்.

நாவலின் மிகப்பெரிய பிரச்சனை அரை மலையாளமும் அரைத்தமிழும் கலந்த கன்னியாகுமரி(?) தமிழ் மட்டும்தான். எனக்கு மலையாள பரிச்சயம் உண்டென்பதால் வேகமாக படித்துவிட முடிகிறது.இரண்டு முறை படித்துவிட்டேன். 

ஜனவரி 1 2010 மீண்டும் பழனியில் என் தேடல் அந்த பிச்சைகாரர்களை நோக்கியே இருந்தது. புலனாய்வு பத்திரிகை நண்பர்களை தொடர்பு கொண்ட போது நான்கடவுள் படம் வெளியான பின் இப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்ததாக சொன்னார்கள். என்னால் நம்ப முடியவேயில்லை. ஒரு சமூக மாற்றத்திற்கோ அல்லது ஒரு சமூகத்திற்கோ பேருதவி செய்யுகிற படைப்புகள்.. ஜெயமோகனால் சிலருக்கு விடுதலை கிடைத்திருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

மேலும் துருவியதில்.. பிச்சைகாரர்கள் வேறு வேடம் பூண்டிருந்தனர். இப்போதெல்லாம் பழனியைச்சுற்றி பிளாஸ்டிக் பொம்மைகளும் , பேனாவும், பென்சிலும், இன்னும் சில மலிவான பொருட்களையும் கையில் சுமந்தபடியும் ஆங்காங்கே சுற்றியும்,அமர்ந்த படிக்கும் விற்றுக்கொண்டிருந்தனர். அனைவருமே முன்னால் பிச்சைகாரர்கள். தற்போது வேடம் மாறியிருக்கிறது. நிறைய சின்ன சின்ன குழந்தைகள் பொம்மை விற்றுக்கொண்டிருந்தனர்.

சாமியார் தாத்தாவைத்தேடினேன் அவருடைய நண்பர்தாத்தா மட்டும்தான் சிக்கினார். தாமரைக்குளம் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தார்! அவரிடம் விசாரித்தப்போது தற்போது சாமி திருப்பதியில் இருக்கிறாராம்.. அவருடைய குடும்பம் என்றேன்.. அவிங்க குருவாயூர்லயும் மதுரையலயும் இருப்பதாக சொன்னார். சாமியார் மட்டும் அவ்வப்போது செல்போனில் அழைத்து பேசுகிறாராம்!
http://www.athishaonline.com/2010/08/blog-post.html

கீதப்பிரியன் விமர்சனம்

நாம் வாழும் உலகுக்கு அடியில் வெகு ஆழத்தில் உள்ள இன்னொரு உலகம்,  குரூரத்தால், வலியால், சிறுமையால் எழுதப்பட்டது இது, மானுடம் என்ற மகத்தான சொல்லின் நிழல், ஒரு கோணத்தில் நமது நமது அனைத்து செயல்பாடுகளையும் மௌனமாக அடிக்கோடிடும் கருமை. 

ரளமும் நுட்பமும் கொண்ட மொழியில் நேரடியாகச் சொல்லப்படும் இந்நாவல் , நம் வாழ்வு குறித்தும் நம் பண்பாடு குறித்தும் மிக அந்தரங்கமாக நாம் எழுப்பிக்கொள்ளச் சாத்தியமான எல்லா வினாக்களையும் நைச்சியமாகத் தூண்டக்கூடியது.

தை படிக்கும் நாம் தான் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம்? என நிச்சயம் உணரவைக்கும். தப்பித் தவறி இந்த இழி நிலை நமக்கு வந்திருந்தால்?  நம் உறவினருக்கோ, நண்பருக்கோ ஏற்பட்டிருந்தால்? ஐயகோ!!!!

ஏழாம் உலகம்- ஜெயமோகன் தமிழினி வெளியீடு,

170 ருபாய் கொடுத்து நாவல் பிரியர்கள் வாங்கி படிக்க ஏற்ற தரமான ஒன்று, தமிழின் மிக அருமையான டார்க் ஹ்யூமர் படைப்பு என இதை மார்த்தட்டி சொல்லிக்கொள்வேன், நாவல் முழுக்க படித்து முடிக்க 2 நாள் பிடிக்கும், (ஊன்றிப்போய் ,உள் வாங்கி படிக்க)நான் கடவுள் படம் பார்த்த மற்றும் பார்க்காதவர்கள் யார் படித்தாலும் கண்டிப்பாக இதைத்தான் சிலாகிப்பர், [நான் இன்னும் பார்க்கவில்லை ,படம் இந்த கதையை அப்படியே பிரதிபலிக்குமா ? என்பது சந்தேகமே]

து நம்மை சுற்றி நடக்கும் அபாயகரமான , அருவருப்பான, பணத்தாசை ,மற்றும் காம வெறி பிடித்த,சாதாரண மனிதர்கள் போல இருக்கும்,பசும்தோல் போர்த்திய புலிகளின் கதை, நாவல் முழுக்க நிரம்பி வழியும் குரூரம் நம் அன்றாட வாழ்வின் யதார்த்த நிஜம், இதை படித்து முடித்த போது கனத்தது என் மனது. நாம் ஒரு கையால் ஆகாத கோழைகள் என்று, நாவல் முழுக்க பின் நவீனத்துவ பாணியில், தனக்கு பிடித்த வட்டார மொழியின் செரிவுடன் பிண்ணிப் பிணைந்திருக்கிறார் ஆசிரியர், கதை நாகராஜா கோவிலில் நடந்தாலும், பழனியில் நடந்தாலும், நாகர் கோவிலில் நடந்தாலும், நாமும் அங்கேயே நாவலில் சுற்றி வருவது போல மாற்றி விட்டார்,

ட்டார மொழி முதலில் நமக்கு பிடிபட மறுத்தாலும் நாவலின் குரூரமும், அவலமும்,கதாபாத்திரங்களின், நேர்த்தியான பங்களிப்பும் அதை மறக்கடிக்கிறது. பழகி விடுகிறது. சாப்பிடக்கூட புத்தகத்தை கீழே வைக்கத் தோன்றாது. கிறங்கடிக்கும் சிலேடைகள் ரிவர்ஸில் போய் படிக்க வைக்கும் என்பது திண்ணம்.

நாவலின் கடைசி பக்கங்களில் அகராதி வேறு இருப்பதால் ஒன்றும் பிரச்சனையில்லை.  இதில் வரும் பண்டாரம் என்னும் பாத்திரம் ஒரு கேவலமான பிழைப்பை பிழைப்பவர், 20,30 குறைபிறவி பிச்சைக்காரர்களை (உருப்படிகள்) வைத்துக்கொண்டு தன் பணத்தேவைக் கேற்ப வாங்கியும், விற்றும் வரும் இழிபிறவி, அவருக்கு துணையாக உருப்படிகளை தொட்டு தூக்கி, மலம் கழிக்க வைத்து, தீனி வாங்கி போட்டு,காவல் இருந்து, சில்லறைகளை வசூலித்து , சேர்ந்ததும் பண்டாரத்திடம் கொடுத்து, உருப்படிகளை திருவிழா சமயத்தில் மலை மேல் கொண்டு பிச்சை எடுக்க போடும் பெருமாள்,குமரேசன்,வண்டி மலை,சிண்டன் நாயர், என பாத்திர படைப்பு  படு பயங்கரம், இவனுங்க கண்ணில் நாமோ ? நம் குழந்தைகளோ ? பட்டே விடக்கூடாது என வேண்ட வைக்கும்.

ண்டாரத்தின் மனைவியாக ஏக்கியம்மை, தன் கணவன் தொழிலில் தானும் ஐக்கியமாகி விட்ட ஒருத்தி, அவளின் ஒரே குறிக்கோள், மகள்களின் திருமணம், கணவனுக்கு பக்க பலம், கணவனின் வேறு பெண்களுடனான உடல்ரீதியான தவறுகளை கண்டும் காணமல் போகும் ரகம், அவளின் ஒரே குறி பொன்னுருக்குவது,திருமண வயதில் உள்ள பெண்களுக்கு தரம் பார்ப்பது, 

ண்டாரத்தின் மூத்த பெண் வடிவம்மை சுயநலம் பிடித்த பிறவி, இரண்டாம் பெண் அடங்காப்பிடாரி, வாயாடி , மூன்றாம் பெண் எந்நேரமும் தூங்கி வழியும் ரகம், (தன் உருப்படி முத்தம்மை பெற்ற பிள்ளை ரஜினி காந்து காய்ச்சலில் கிடக்கும் போது பெருமாளிடம் சொல்லி பிளாஸ்டிக் பேப்பரில், வெய்யிலில் கிடத்தி அரை மணிகொருமுறை தண்ணீரை மேலே ஊற்ற சொல்லுபவர், தன் கடைசி மகள் சரியாக சாப்பிடமாட்டேன் என்கிறாள், என்று வருத்தப்படுவதும், அவளுக்காக வளையல் செய்ய அர்த்த ராத்திரியில், நாகர்கோவில் சென்று கொல்லன் வீட்டு கதவை தட்டி விடிய விடிய வளையல் செய்து வாங்கி வந்து, தூங்கிக்கொண்டிருக்கும் மகள் கையில் போடுவதும்!!!!, சுயநலத்தின் உச்சம், 

மூத்தவளுக்கு தரம்(வரன்)கொண்டு வரும் நாயர் தரகர் சரியான நகைச்சுவை கதா பாத்திரம், ஏப்பை சோப்பையான ஆள் என்ன கிடைத்தாலும் கேட்டு விழுங்குகிறார், நாவலில் எந்த பாத்திரத்தையும் திணிக்காமல், ஒட்டி உறவாட விட்டிருக்கிறார், கோவனத்திர்க்குள் ஒளித்து வைத்திருந்த ஆயிரத்து நானூறு ருபாய் பணத்தையும் போலீசிடம் பறிகொடுத்து, கொட்டையில், அடிவாங்கி கண்கள் வீங்கி வெளியே வந்து ,கான்வாஸ் ஷூ மாட்டும் பண்டாரம், ஷூவுக்குள் 'sole 'லுக்கு அடியில் ஒளித்து வைத்த இருபது ஐந்நூறு ருபாய் நோட்டுகளை எண்ணி,அதை பார்க்கும் டிரைவரிடம் போலீஸ் பனிரெண்டாயிரம் பிடுங்கியதாக பொய் சொல்கிறார்,

ண்டாரத்தின் குணத்தை ஒரே காட்சியில் ஜெமோ சொல்லிவிடுகிறார், (பெருமாள் போலீசுக்கு நூறு ருபாய் மாமூல் கொடுத்து விட்டு,பண்டாரத்திடம் மூன்று போலீஸ் வந்ததாகவும் முன்னூறு தந்ததாகவும் பொய் சொல்கிறான்) ,
ஆக பாத்திரங்கள் ஒன்றை ஒன்று விழுங்குவதை குறிப்பால் உணர்த்திக்கொண்டே இருக்கிறார், சகாவு என்னும் மலையாள ஈனப்பிறவி ஒரு ஆங்கிலம் பேச தெரிந்த , கம்யூனிஸ்ட் நொண்டி[வார்த்தைக்கு மன்னிக்கவும்] , இவனும் குறை பிறவிகளை சகாக்கள் என்று அழைத்து பிச்சை எடுக்க விடுபவன் ,இவனிடம் இருநூறு சகாவுக்கள் உள்ளனர், முன்னாள் பிச்சைக்காரன்)தற்போது ஒரு கோடிக்கும் அதிகமான சொத்து உடையவன், அவன் வருங்கால மருமகன் மம்மூட்டி போல அழகான வக்கீல் ஸ்ரீகண்டன் நாயர், எல்லா கணக்கு வழக்குகளையும் பார்க்கிறான்,

வர்கள் பேசும் விஷயங்கள் அப்பப்பா?!!!, நாம் அறியாத தொழிலில்,எத்தனை நெளிவு,சுளிவுகள்?பண்டாரத்தை வைத்து இவர்கள் ஒரு கணக்கு போட்டால் பண்டாரம் கணக்கு வேறாக இருந்க்கிறது. பழனியில் கட்டை பஞ்சாயத்து,திருட்டு ,குறை பிறவிகளை வைத்து ,வியாபாரம் பிச்சையிட்ட சில்லறைகளை எண்ணி வாங்குவது, மற்றும் ட்ராவல்ஸ் நடத்தும் யானைக்கால் வியாதி முற்றிய நாயக்கர், அவர்கள் திருட்டு சீடர்கள் என்று இன்னொரு பக்கம், 

தில் ஒருவன் பண்டாரத்தின் பணப் பையை ஒரு சமயம் பிக் பாக்கெட் அடிக்க முயன்று தோற்று, அதற்குள் பண்டாரம் வங்கியில் செலுத்திவிட ,பின்னர் அவர் அவனை ஓட்டலில் வைத்து அடையாளம் கண்டு குறும்பாய் வணக்கம் சொல்ல, இவன் விழித்து அவர் தன்னை கண்டுபிடித்து விட்டதை உணர்ந்து, அவரிடமே ||காலையில் இருந்து உங்கள் பின்னால் அலையுறேன்.||

ரு டிபன் வாங்கி கொடுங்கள் , என்று கேட்க அவர் வாங்கித் தந்தவுடன் கூலாக சிகரெட் வாங்கி தரச் சொல்லி கேட்டு பற்றவைத்தவன்  அந்த  பையில் எவ்வளவு இருந்தது ? என்று கேட்க , பண்டாரம் அறுவது ஆயிரம் என்று சொல்ல, அடடே விட்டுட்டேனே....என்கிறான். இது உலகத்தரம், இந்த மாதிரி கண்முன் விரியும் காட்சிகளை நமக்கு காட்டிக்கொண்டே இருக்கிறார், தனது மாயாஜாலம் போன்ற எழுத்தில். 

ஆனால் மனிதர் ஒன்றிரெண்டு ஜாதியை தவிர எல்லோரையும் இழுத்துவிட்டார்,இது அவருக்கே உறிய அங்கதம் போலும்!!! ஆனால் இது என்றும் கைகொடுக்காது. நாள் போக்கில் சலிப்பு தட்டிவிடும்,(காடு நாவலில் மேனன் சாதியினரை பத்தில் ஒன்பது பேர் கடைந்தெடுத்த தேவடியாப்பயல்கள், ஆனால் அந்த மீதி ஒரு ஆள் தெய்வம் என்று வர்ணித்தார்,
தவிர இழவர்,கண்டன் புலயன்,தலித்துகள்,நாடார்கள் ,கிருத்துவர் என அத்தனை பேரையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எள்ளி  நகையாடுகிறார்.இது மிகவும் அருவருக்கத்தக்கது,படிப்போருக்கு மன உளைச்சலை தரவல்லது)என்ன தான் இந்த பகடிகளை கதாபாத்திரங்கள் பேசினாலும்,ஆசிரியரின் சாதி மத வெறி தான் துருத்திக்கொண்டு கதாபாத்திரங்கள் மூலம் பேசுகிறது என்பேன்.

ண்டாரத்தின் காமதேனு முத்தம்மை என்னும் உருப்படி , கை கால் சூம்பிப்போன ,ஒரு கண்ணில் பார்வையும் ஒரு கண்ணில் சதையும் கொண்டவள், (நாவல் முழுக்க இவளை எருமைமாடு,பன்றி என்கின்றனர்,) குறைபிறவிகளோடு அவளை இணங்க விட்டு 18 குறைபிறவிகளுக்கும் அதிகமாக அவளை பிரசவிக்கவும்  விட்டு, கோவிலில் பிச்சை எடுக்கவும்  விட்டு ,  பின்னர் வந்த விலைக்கு விற்றும் விடுகிறார், அவளுக்கு காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல் தன் பிள்ளைகளின் மேல் அவ்வளவு பாசம், ஆனால் அவள் பதினெட்டு பெற்றும் அவளை அம்மா என்று அழைக்க ஒன்றும் இல்லை. எல்லாம் எங்கெங்கோ யார் யார் ஒப்பந்தத்திலோ ?!!! பிச்சை எடுக்கின்றன,  ஆனாலும் அவளுக்கு ஒரு நம்பிக்கை. என்றேனும் ஒரு நாள் தன் பிள்ளையை பார்ப்போம் என்று.!!!

ராமப்பன். இரு கால்கள் இழந்த கிழம், நல்ல வாய்,மனிதர் வாயை திறந்தாலே நகைச்சுவை, பெருமாள் தேடாத இடமாக கண்டுபிடித்து சில்லறைகளை ஒளித்து வைத்து பீடி,டீ,வடை , புகை பீடி(கஞ்சா) என்று மனிதர் தானும் உண்டு பிறருக்கும் தருகிறார், ஏழ்மையிலும் கொடை என்பார் போல, (விலைநங்கை ஒருத்தி பழனி படிக்கட்டில் இருந்து கிராக்கி ஒன்றும் மாட்டாமல் அலுப்பாய் இறங்கி வர, இவர் அவளை அழைத்து, எதாவது சாப்பிடும் படி ஐந்து ரூபாயும், அவளுக்கு மகன் உள்ளது கேட்டு, அவனுக்கு எதாவது வாங்கி கொள்ளும் படி ஐந்து ரூபாயும் தருகிறார்,) பழனி மலை மேலேயே இப்படி விபச்சாரம் கொடிகட்டிப் பறப்பதை நினைத்துப் பதை பதைக்கிறது மனது. அவரின் உணர்ச்சிபூர்வமான பாத்திரப் படைப்பு அற்புதம்,

குருவி என்னும் சக உருப்படியை சகாவு வாங்கிவிட்டது தெரிந்ததும், அவரிடம் என்னையும் வாங்கிடும்யா, மாடா உழைக்கிறேன், இந்த குழந்தையும் நானும் தாயா, புள்ளையா, பழகிட்டோம்யா , என்னையும் வாங்குயா ,என்று கெஞ்சும் இடம் பிச்சைகாரர்களிலும்,நல்ல ஆத்மாக்கள் உண்டு என சொல்கிறது, மாங்காண்டி சாமி, தொரப்பன்,தாணுப் பிள்ளை,குருவி, பண்டாரத்தின் சம்மந்தி, அவரை பெற்ற குண்டினித் தாய் என அடேங்கப்பா!!!.(முருகன் கொஞ்சம் முரண்டு பிடித்தால் வள்ளிக்கும்தெய்வயானைக்கும் கள்ளத்தொடர்பு உண்டு என்பாளாம் அந்த குண்டிணித்தாய் ஒருத்தி!)இதில் யாரை விடுவது?எல்லாமே யதார்த்தம்,செருகலே இல்லை. 

ப்புறம் இவர் பழனி லாட்ஜில் வைத்து ஒரு விலை நங்கையை கூட, இவரை அந்த பெண் "கையாலாகாத்தனம்"குறித்து கேலி செய்கிறாள். அந்த பெண்ணை நினைக்கையில் இவரின் இரண்டாம் மகளையே புணருவது போல இவருக்கு எண்ணம் வந்து போவது,அவர் மகளின் தடித்தனத்தை, பொறுக்கித்தனத்தை நமக்கு சொல்லாமல் சொல்லி விடுகிறது. நாவலில் படங்கள் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மனக்கண்ணில் விரிகின்றன.எனக்கு மட்டும் நேரம் கிடைத்தால் இலவசமாகவே "ஸ்டோரீ போர்டு "வரைந்து ஜெமோவுக்கு பரிசளிப்பேன். 

மிக தேர்ந்த சாமர்த்தியம் கொண்ட முருகன் கோவில் அர்ச்சகர் போத்தி. முருகனா?யார் நம்ம பூக்கடை முருகனை சொல்றியா?என்கிறார். ஜெமோ ஒவ்வொரு நாவலிலும் இப்படிப்பட்ட மனதில் நிற்கும் கதா பாத்திரங்களை படைப்பார் போல, (காடு நாவலில் - குட்டப்பன் , ஐயோ!!! சான்ஸே இல்லை. ஹெர்குலிஸ் போல ஒரு உறுதி) போத்தி கூட்டமில்லாத நேரங்களில் ஒரு கட்டிங் போட்டு விட்டு கருவறைக்குள்ளேயே உலவி, வெற்றிலை போட்டு குதப்பி, முருகன் காலடியிலேயே துப்பி ,பின் நடை சாத்தும் முன்னர் அலம்பி விடுகிறார். அது எல்லா கோவிலிலும் நடக்கும் ஒரு சங்கதியாம், அதை சொன்ன விதம் யதார்த்தம். நமக்கு படிக்கும் போதே வயிறு கலக்குகிறது.

முத்தம்மையை நிர்வாணமாக பார்க்க வேண்டும் என்ற வினோத ஆசை ,வேறு விபரீதமாய் கொண்டிருக்கிறார். பண்டாரம் மகளின் திருமண நகையில்லாமல் திருமணம் நின்று போய்விடுமோ என!! இடிந்து போன வேளையில் எந்த பிரதி உபகாரமும் பார்க்காமல் அவரின் மூத்த பெண் கல்யாணத்தை சிக்கனமாகவும் , கறாராகவும் நடத்தி வைக்கிறார். இது போல ஆள் வீட்டுக்கு ஒருவர் தேவை.

முக்கியமாக தன் தர்பூசணிப்போன்ற வீங்கிய விதைப்பையை கடந்து போகும் நாற்பது வயது ஆசாமிகளுக்கு லகுவாய் தனியே அழைத்து காட்டி இரக்கம் சம்பாதித்து பிச்சை கேட்கும் அகமது,என்ன மாதிரி சட்டம் தெரிந்து வைத்து பண்டாரத்தை மிரட்டுகிறான்,தினமும் படிக்க மாத்ருபூமி கேட்கிறான்.அடேங்கப்பா!!!

ண்டாரம் என்னதான்? நயவஞ்சகமாக கொடுமைகள் செய்தாலும். உருப்படிகள் பண்டாரத்தை ‘மோலாளி, மோலாளி ‘ என்று அன்புடன் அழைத்து ஒரு குடும்பமாக பழகுகிறார்கள். அவருடைய மகள் கல்யாணம் நல்லபடி நடக்கவேண்டும் என்பதில், ராமப்பனும், அகமதும் காட்டும் அக்கறை வியக்க வைக்கிறது. பண்டாரம் எவ்வளவுதான் கொடுமைக்காரராக வந்தாலும், அவரை வெறுக்க முடியவில்லை. அதுதான் நுட்பமான படைப்பு என்பது. குஷ்டரோகி தன் பிளந்த சதை மடிப்புக்குள் பணத்தை பதுக்கி வைப்பது,இரண்டு கால்களும் இல்லாத, உருண்டு போகமட்டுமே சாத்தியம் கொண்ட பெண் உருப்படியை போலீஸ்காரரின் ஆசையை தீர்க்க பண்டாரம் அனுப்பி வைப்பதும், சிறு பிள்ளைகளைப் பிடித்து அமிலம் ஊற்றி, உருமாற்றி ஒரு கணவன் மனைவி கும்பல் விற்பதும், அங்கு போய் மாட்டிக்கொண்ட பண்டாரம் ஆசைவிடாமல் மூவாயிரம்னா வாங்கலாம், என்று விலை பேசுவது கொடுமையின் உச்சம்!!
உருப்படிகளின் உடம்பில் வேலை செய்யும் அங்கங்களை தெரிந்து விற்றுக் காசாக்குகிறார்.

வருக்கு மனதை உறுத்தவே இல்லை. ஒரு கால், ஒரு கை, ஒற்றை முலை முத்தம்மை, தன் குழந்தையை நாய் இழுத்து போகாமல் தன் சதை மடிப்புகளிடையே மறைத்து வைத்து படுத்திருப்பாள். அவள் குழந்தையை ஈவிரக்கமில்லாமல் பிரித்து விற்றுவிடுவார்கள். அவள் ‘ரசனிகாந்து, ரசனிகாந்து ‘ என்று அரற்றியபடி அன்ன ஆகாரம் இல்லாமல் காய்வாள். தாலிகட்டி ஐந்து நிமிடம்கூட ஆகவில்லை, அருமை அருமையாக வளர்த்த பெண் ‘நான் அவிகவிட்ட பேசி எல்லாத்தையும் களட்டி தாறேன் ‘ என்று சொல்வது, இந்த இடங்களில் எல்லாம் சொல்லமுடியாத அதிர்ச்சி ஏற்படுகிறது. ஆனால் நம்பகத்தன்மை குறையவில்லை. நேரடி அனுபவத்தில் எழுதிய நாவல் என்றபடியால் உண்மை ஒளி வசனத்துக்கு வசனம் வீசுகிறது. சபாஷ் சார். நாவல் திடாரென்று முடிகிறது. அது குறையேயில்லை. ஒரு வித அடையாளம் ,ஸ்டைல்.

முத்தம்மை தான் பெற்ற முதல் மகனை வைத்தே குறை உருப்படி உண்டாக புணர விடப்படுகிறாள், அதுவும் ஒரு மலக்காட்டில் , இவள் அவனை அவனின் ஒற்றை விரலை வைத்தே கண்டுகொண்டு, ஐயோ உடையோரே இவன் வேண்டாம், ஒத்தை விரல், இவன் வேண்டாம் , என்று கதற, பலபேரதிர்ச்சிகள் மனதுக்குள் எழ, பல கேள்விகள் விடைகளின்றி தொக்கி நிற்கின்றன . இனி என்ன நடக்கும் ? தெரியவில்லை.. அதை நம் ஊகத்துக்கே விட்டு விட்டார்ஆசிரியர். மனிதர் புலிப்பால் கறந்து தந்திருக்கிறார்.மிகவும் ஸ்ட்ராங்!!!.

திருஷ்டி இல்லாமலா ?பின்னே :-
(கால கட்டத்தை சொல்லுவதில் தடுமாற்றம்)

முத்தம்மை தங்கமகன் படம் போஸ்டர் பார்த்து தன் மகனுக்கு ரசினிகாந்து என பெயரிடுகிறாள்.(1983 வெளியீடு? ) பண்டாரம் பஸ்ஸில் பயணிக்கும் போது பனி விழும் மலர்வனம் பாடல் கேட்டு மிகவும் கவனம் சிதறுகிறார். என்ன அர்த்தம் என குழம்புகிறார்.(1982 வெளியீடு ) இவரின் சின்ன மகளை மயக்கி இழுத்துக் கொண்டு ஓடியவன் "yezdi" பைக் வைத்திருக்கிறான் . வளையல் செய்ய பவுன் விலை 4000 ரூபாய் [ஆக நம்மால் எளிதாய் இது 80களின் கதைக்களம் என உணரமுடிகின்றது]

னால் பாருங்கள்!!! பிச்சை போடும் தர்ம பிரபுக்கள் "ஐந்து ரூபாய் நாணயம் பிச்சை போடுவதும், [அப்போது ஐந்து ரூ நாணயம் இருந்ததா?] பிச்சைகாரர்கள் சாதாரணமாக நாற்பது ரூபாயை பதுக்கி தேற்றுவதும், குய்யன் ஐம்பது ரூபாய் கொடுத்து ஆர்ய பவன் சாப்பாடு சாப்பிடுவதும், குறைபிறவிகளை பதினைந்தாயிரம் ,  இருபதாயிரம் என விலைபேசி விற்பதும் லேசாக நமக்கு இது எந்த வருடம் நடக்கிறது? என்னும் வினாவை நிச்சயமாய் எழுப்புகிறது.  இதை மட்டும் சரி பண்ணியிருந்தால் நமக்கு எல்லா விடைகளும் நாவலிலேயே கிடைத்திருக்கும்.இந்த புத்தகத்தை இவ்வளவு அழகாக கொண்டு வந்த தமிழினி குழுமத்தாருக்கு நன்றிகளும் பாராட்டுக்களும். 

வரைப்பற்றி நிறைய விமர்சனங்கள் உலவி வருகின்றன, அதை எல்லாம் பற்றி மனிதர் கவலை படுவதே இல்லை. எழுத நினைத்ததை ஏட்டில் கொண்டு வருகிறார். என்று யாரிடம் அடிவாங்குவாரோ?இவரின் காடு நாவலில் எல்லை இல்லாத கவித்துவமான வார்த்தைகளை வைத்து உயிரோட்டமான நாவலை படைத்திருப்பார். (அது பற்றி பின்னர் பார்ப்போம்)
http://geethappriyan.blogspot.in/2009/06/100-ways-you-can-improve-environment.html

=============0000==============