ன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு,
முதன் முதலாக உங்களின் நாவல் ஏழாம் உலகைப் வாங்கிப் படித்தேன். பிரமிப்பு.
சில படங்களைப் பார்க்கும் போது நம்மை அறியாமலே அப்படத்தினூடே புகுந்து விடுவோம். அகம், புறம் இவற்றை மறந்து ஒன்றிப் போய் விடுவோம். அவ்வாறு என்னை முற்றிலுமாக ஆக்ரமித்துக் கொண்ட படம் “அழகி”. அதற்குப் பிறகு ஒரு புத்தகம் என்னை முழுவதுமாய் ஆக்ரமித்துக் கொண்டது உங்களின் நாவலைப் படித்த போது தான்.
தங்களின் நாவல் ஏழாம் உலகை காலையில் எடுத்தேன். படித்தேன். முடித்தேன். இரவு 7.00. மனம் வேதனையிலும், விரக்தியிலும் வெம்பியது. அதன் பிறகு மூன்று நாட்களாயின அச்சூழலிலிருந்து வெளிவருவதற்கு.
இதுவரையில் நான் பார்க்காத உலகம். அதிர்ச்சி. அதிர்ச்சி. இப்படியும் மனிதர்கள் வாழ்க்கை இருக்கிறது என்று பட்டென்று அடித்தது.
”மனிதன் என்ற சொல்லுக்கு இன்னொரு வார்த்தை – உருப்படி”.
பிச்சைக்காரர்களின் உலகத்தில் மனிதனுக்குப் பெயர் ”உருப்படி”, வணிக உலகத்தில் “எம்ப்ளாயி”
உங்கள் நாவலைப் படித்த பிறகு ஏதோ ஒரு மாயத்தோற்றத்திற்குள் மாட்டிக் கொண்டது போல இருந்தது. அவ்வுணர்ச்சியைப் பற்றி விவரிக்க வார்த்தைகள் இல்லை.
ஒரே ஒரு வார்த்தை : பிரமாதம்
பின்னர், தங்களின் அமெரிக்கப்பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
கோவையிலிருந்து தங்கவேல் மாணிக்கம்
அன்புள்ள தங்கவேல்
ஏழாம் உலகம் என் நாவல்களில் நேரடியானது. கிட்டத்தட்ட அது எடுத்துக்கொள்ளும் கேள்வியையே– மனிதனின் சாரம் என்ன என்ற வினாவை- வரலாற்றிலும் தொன்மன்களிலும் வைத்துப்பேசும் விஷ்ணுபுரம் போன்ற நாவல்களும் உங்கள் கவனத்துக்கு வரவேண்டும். ஏழாம் உலகம் நல்ல தொடக்கம்
ஜெ
ஜெ
No comments:
Post a Comment